லோகேஷ் கனகராஜ் - RJ பாலாஜி சந்தித்தது இதற்கு தானா! சூப்பர் அப்டேட்

By Parthiban.A May 11, 2023 04:45 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்ட பலரும் நடித்த வருகின்றனர்.

லோகேஷ் படம் இயக்குவதும் மட்டுமின்றி தற்போது படம் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். ஸ்டாண்ட் மாஸ்டர்கள் அன்பறிவு இயக்கும் படத்தில் அவர் முக்கிய ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் - RJ பாலாஜி சந்தித்தது இதற்கு தானா! சூப்பர் அப்டேட் | Lokesh Kanagaraj Act In Rj Balaji Movie

RJ பாலாஜி படத்தில்

இந்நிலையில் சமீபத்தில் RJ பாலாஜி லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதனால் அவரும் லியோ படத்தில் நடிக்கிறாரா என ஆரம்பத்தில் சந்தேகம் எழுந்தது.

ஆனால் விஷயம் என்னவென்றால் லோகேஷ் தான் RJ பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம். அதற்கான ஷூட்டிங் நடந்த நேரத்தில் எடுத்த போட்டோ தான் அது என கூறப்படுகிறது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் இயக்குனர் கோகுல் தான் இந்த படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US