அட்லியை தொடர்ந்து பாலிவுட்டில் நுழையும் லோகேஷ் கனகராஜ்! பிரம்மாண்ட கூட்டணி
லோகேஷ் கனகராஜ் தற்போது கோலிவுட்டில் மோஸ்ட் வான்டட் இயக்குனர். அவர் இயக்கிய விக்ரம் படம் 400 கோடிக்கும் அதிகமாக உலகம் முழுவதும் வசூலித்து இருக்கிறது.
அடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய் உடன் கூட்டணி சேர்க்கிறார். தளபதி 67 படத்தை அவர் இயக்கும் நிலையில் அதற்கான கதை பணிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருவரும் கூட்டணி சேர இருப்பதாக பாலிவுட் மீடியாவில் செய்தி வெளியாகி இருக்கிறது. தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி ப்ரோடக்ஷன்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்தில் சல்மான் கான் மற்றும் லோகேஷ் சந்தித்து கொண்டதாகவும், அப்போது லோகேஷ் கூறிய கதையை சல்மான் கான் ஓகே செய்துவிட்டார் எனவும் கூறப்படுகிறது.
இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.