நெல்சனிடம் பீஸ்ட் அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்! இவருமா..
ரசிகர்கள் பீஸ்ட் அப்டேட் கேட்டு வரும் நிலையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் நெல்சனிடம் பீஸ்ட் அப்டேட் தரும்படி கேட்டிருக்கிறார்.
பீஸ்ட்
விஜய்யின் பீஸ்ட் படத்தின் மீது தான் தமிழ் சினிமா ரசிகர்களின் மொத்த எதிர்பார்ப்பும் தற்போது இருந்து வருகிறது. முதல் பாடல் அரபிக் குத்து பெரிய ஹிட் ஆகி இருக்கும் நிலையில் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.
மேலும் ரிலீஸ் தேதியை எப்போது அறிவிப்பார்கள், ட்ரெய்லர் எப்போது வரும் என்று தான் ஒட்டுமொத்த ரசிகர்களும் கேட்டு வருகின்றனர்.

அப்டேட் கேட்ட லோகேஷ் கனகராஜ்
விஜய்யின் முந்தைய படமான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது கமலின் விக்ரம் படத்திற் இயக்கி வருகிறார். லோகேஷுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் விக்ரம் பட மேக்கிங் வீடியோ வெளியாகி இருந்தது.
அதை பற்றி ட்விட் செய்திருக்கும் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் 'விக்ரம் intense ஆக இருக்கிறது. பார்க்க காத்திருக்கிறேன்' என ட்விட் செய்திருக்கிறார்.
அதற்க்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ், பதிலுக்கு பீஸ்ட் அப்டேட் கொடுங்க என கேட்டிருக்கிறார்.
