கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்.. வீடியோ இதோ

By Kathick Mar 14, 2024 07:00 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ்

வெறித்தனமான ஆக்ஷன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தத்ரூபமான ஆக்ஷன் காட்சிகளை எடுப்பதில் சிறந்து விளங்கும் இவர், மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்தார். இதை தொடர்ந்து கார்த்தியுடன் இணைந்து கைதி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார். இதன்பின் தளபதி விஜய்யுடன் கைகோர்த்த லோகேஷ் கனகராஜை தென்னிந்திய சினிமா திரும்பி பார்த்தது.

கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்.. வீடியோ இதோ | Lokesh Kanagaraj Birthday Celebration

நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

நடிகை ஜோதிகாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

கொரோனா சமயத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. மாஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது மானசீக குருவான கமல் ஹாசனை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ். ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து விக்ரம் திரைப்படம் சாதனை படைத்தது.

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய கான்சப்ட்டாக LCU-வை கொண்டு வந்தார். கைதி, விக்ரம் ஆகிய படங்களை ஒன்றிணைத்தார். விக்ரம் படத்திற்கு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்து லியோ படத்தை எடுத்தார். இப்படத்தையும் தனது LCU-வில் இணைத்த பட்டையை கிளப்பினார்.

கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்.. வீடியோ இதோ | Lokesh Kanagaraj Birthday Celebration

பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ்

அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 171வது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ள லோகேஷ், அப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், இன்று லோகேஷ் கனகராஜுக்கு பிறந்தநாள். இதை தனது நண்பர்கள் ரத்னகுமார், ஜெகதீஸ், அர்ஜுன் தாஸ் மற்றும் பலருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US