ஜனநாயகன் படத்தில் லோகேஷ் கனகராஜ்! ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒரு சம்பவம்
நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜன நாயகன். பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய இந்த படம் சென்சார் பிரச்சனையால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.
இந்த படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற பகவத் கேசரி படத்தின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்க்காக சில மாற்றங்கள் கதையில் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அவர் அரசியலில் நுழைந்திருப்பதால் அது பற்றிய பல விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ்
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் ஜனநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
'ஒரு நாள் ஹெச்.வினோத் அண்ணனும், விஜய் அண்ணனும் கூப்பிட்டாங்க. அது கேமியோ ரோல் தான். அவ்வளவு தான என்னால் சொல்ல முடியும்' என லோகேஷ் கனகராஜ் பிரெஸ் மீட்டில் கூறி இருக்கிறார்.
