பிரச்னையை தவிர்க்க லோகேஷ் கனகராஜ் செய்த விஷயம்! விக்ரம் கதை அப்டேட்
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
ரிலீசுக்கு இன்னும் இரண்டு ஐந்து வாரங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தற்போதே ப்ரோமோஷன் பணிகளை தொடங்கி விட்டனர். ரயில் எஞ்சினில் விக்ரம் பட ப்ரோமோஷன் செய்யப்பட்டு இருந்த வீடியோ சமீபத்தில் வைரல் ஆனது.

கதைக்கு காபிரைட் வாங்கிய லோகேஷ்
இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் விக்ரம் பட கதைக்கு காபி ரைட் வாங்கி இருக்கிறார். டெல்லியில் இருக்கும் காபிரைட் ஆபிசில் விக்ரம் பட ஸ்கிரிப்ட்டை காபி ரைட் செய்து இருக்கும் சான்றிதழ் தற்போது வெளியாகி இருக்கிறது.
படத்தின் கதை பற்றி பல்வேறு சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகள் வருவது தமிழ் சினிமாவில் வாடிக்கையாகி விட்ட நிலையில் அப்படிப்பட்ட சர்ச்சைகளை தவிர்க்க தான் இப்படி ஒரு விஷயத்தை செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
Thanx da? https://t.co/QNRtK3h4jy
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) April 22, 2022