ஹெலிகாப்டருக்கு பெயிண்ட் அடிச்சிட்டு இருக்காங்க.. லோகேஷ் கனகராஜ் முழு ஸ்பீச்
லியோ படத்தின் வெற்றி விழாவில் அந்த படத்தில் பணியாற்றிய மொத்த நட்சத்திரங்களும் வந்திருந்தனர். இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி அனைவரும் பேசினார்கள்.
மேடையில் பேசிய லோகேஷ் கனகராஜ் விஜய்க்கு நன்றி கூறி இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியில் தொய்வு இருப்பதாக சொல்கிறார்கள், ஆனால் நான் தியேட்டர்களில் சென்று பார்த்தேன், மற்ற மாநிலங்களில் கூட பார்த்தேன், மக்கள் தியேட்டரில் கொண்டாடுகிறார்கள் என லோகேஷ் கூறியுள்ளார்.
"லியோ படத்திற்கு பெரிய ப்ரோமோஷன் எதுவும் செய்யவில்லை, இதுதான் முதல் மேடை. என்னுடைய துணை இயக்குனர்களை மேடைக்கு வர வைக்க விரும்புகிறேன், அவர்கள் 20 நாட்களாக லியோ எடிட்டர் பிலோமின் ஸ்டூடியோவின் படிக்கட்டுகளில் தான் அவர்கள் தூங்கினார்கள்."
வெற்றிமாறன்..
இயக்குனர் வெற்றிமாறனை வில்லனாக நடிக்க வைக்க முயற்சித்தேன், ஆனால் அது நடக்கவில்லை.
மீம்களில் வந்தது போல ஹெலிகாப்டருக்கு பெயிண்ட் அடிச்சிட்டு இருக்காங்கனு கேள்விப்பட்டேன் எனவும் லோகேஷ் காமெடியாக கூறி இருக்கிறார்.