உயிர் போகும் அளவிற்கு சினிமாவில் ஒன்றுமில்லை! - ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் அட்வைஸ்
விஜய்யின் வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு திரைப்படமும் நேற்று மிக பிரமாண்டமாக வெளியானது. இரண்டு படங்களையும் சமமான முறையில் தியரங்குகள் ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துணிவு படத்தின் முதல் காட்சியை இரவு 1 மணிக்கு திரையிடபட்டது.

அஜித் ரசிகர் உயிரிழப்பு
இதனால் படம் வெளியாகும் முன்பே ரசிகர்கள் திரையரங்கை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் ரோகினி தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளார் சிந்தாத்ரிப்பேட்டையை சேர்ந்த பரத்குமார் என்ற 19 வயது இளைஞர்.
அப்போது இவர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த லாரி மீது ஏறி டான்ஸ் ஆடியுள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பரத்குமார் தவறி விழுந்துவிட்டார். இதனால் முதுகு தண்டில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.
லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த சம்பவத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் " ரசிகர்கள் அவர்களுடைய பொறுப்பை உணர்ந்தால் போதும். உயிர் போகும் அளவிற்கு சினிமாவில் ஒன்றுமில்லை. திரைப்படத்தை பார்த்து சந்தோசமாக செல்லுங்கள், அது போதும்" என ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்த்த வாரிசு, துணிவு பட முதல் நாள் வசூல் விவரம்- அதிகம் வசூலித்தது இந்த படமா?
கனடாவில் இந்திய மூதாட்டியின் காலில் விழுந்து தங்க நகையை கொள்ளையடித்த பெண்: சிசிடிவி காட்சிகள் News Lankasri
நம் முன்னேற்றத்தை தடுக்க விரும்புகிறார்கள்; அதற்கு தடைவிதிக்கப்போவதில்லை - ட்ரம்ப் திட்டவட்டம் News Lankasri