ஹீரோவாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ்.. முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்
லோகேஷ் கனகராஜ்
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக இணைந்து பணிபுரிந்துள்ளார் லோகேஷ். கூலி படத்தை முடித்தகையோடு அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் கைதி 2 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல் கூறுகின்றனர்.
ஹீரோவாக லோகேஷ்
இயக்குநராக பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் விரைவில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஆக்ஷன் கதைக்களத்தில் லோகேஷ் நடிக்கவிருக்கிறாராம்.
இப்படத்திற்காக தற்போது MARTIAL ARTS பயிற்சியை லோகேஷ் கற்றுக்கொண்டு இருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. கூலி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ஒருபுறம் நடந்து வர, MARTIAL ARTS பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. விரைவில் லோகேஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளிவரலாம் என்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று.

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

காணாமல் போன 4,000 டன் நிலக்கரி.., மழையால் அடித்துச் சென்றதாக அமைச்சர் சர்ச்சை விளக்கம் News Lankasri
