லோகேஷ் கனகராஜின் கதைக்கு ஓகே சொன்ன தெலுங்கு சூப்பர் ஸ்டார், யார் தெரியுமா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக விளங்குபவர். இவர் இயக்கத்தில் வெளியான மூன்று திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.
மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது முதல் திரைப்படத்திலே தமிழ் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய கைதி, விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக உள்ளார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் திரைப்படத்தை இயக்கவுள்ளார். மேலும் இப்படத்தை தொடங்கும் முன்னரே அவரின் அடுத்த படம் குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
ஆம், இரண்டு நாட்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை சந்தித்தாகவும், அப்போது லோகேஷ் கதையை கூற அதற்கு அவரும் ஓகே கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.