கூலி A சர்டிபிகேட் வாங்கியதால் இத்தனை கோடி நஷ்டம்.. லோகேஷ் கனகராஜ் அதிர்ச்சி பேட்டி
கூலி படத்தின் சென்சார் சான்றிதழ் காரணமாக பெரிய நஷ்டம் ஏற்பட்டதாக லோகேஷ் கனகராஜ் பேசி இருக்கிறார்.
கூலி படத்தை பார்த்துவிட்டு 35 இடங்களில் கட் செய்ய சொன்னார்கள். மேலும் ஏராளமான இடங்களில் மியூட் செய்ய கூறினார்கள். அதை செய்து இருந்தால் படமே புரிந்து இருக்காது. அதனால் ஏற்கவில்லை. இப்போதே பல இடங்களில் புரியவில்லை என சொல்கிறார்கள்.

50 கோடி நஷ்டம்
அதன் பின் மறுதணிக்கைக்கு விண்ணப்பித்தோம், அப்போதும் 35 கட் கொடுத்தார்கள். படத்தில் பிணம் எரிக்கும் காட்சி இருப்பதால் A சான்றிதழ் தான் கொடுத்தார்கள்.
அதனால் 40 - 50 கோடி ரூபாய் வருமானம் நஷ்டம் ஆனது என லோகேஷ் கனகராஜ் கூறி இருக்கிறார்.
கூலி இத்தனை சிக்கல்கள், நெகடிவ் விமர்சனம் பெற்று இருந்தாலும் 500 கோடி வசூல் வந்திருக்கிறதே என லோகேஷ் சில வாரங்களுக்கு முன் பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
A சான்றிதழ் இல்லை என்றால் படத்தின் வசூல் இன்னும் அதிகரித்து இருக்கும் என லோகேஷ் கனகராஜ் பேசி இருப்பது வைரல் ஆகி இருக்கிறது. அந்த படம் முழுக்க அதிக வன்முறை காட்சிகள் இருப்பதாக விமர்சனம் வந்தது குறிப்பிடத்தக்கது.
