அது ஒன்றும் பெரிய கிரைம் இல்லை.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிலடி
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கைதி, விக்ரம், லியோ, என முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி தனக்கென ஒரு இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்து கொண்டார்.
தற்போது இவர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இவர் இயக்கத்தில் வெளியான படங்களில் லியோ ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் இந்த படத்தின் இரண்டாம் பாதியில் இடம்பெற்ற ஃபிளாஷ்பேக் காட்சிகள் அந்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.
பதிலடி
இந்நிலையில், பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், "நான் லியோ படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை வேறு ஒரு நம்பிக்கையில் தான் வைத்தேன். ஆனால் அது படத்தில் ஒர்க் அவுட் ஆகவில்லை. இது ஒன்றும் பெரிய கிரைம் இல்லையே" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.