2 மடங்கு அதனால் அதிகமானது, ஓபனாக தனது சம்பளத்தை கூறிய லோகேஷ் கனகராஜ்... இத்தனை கோடியா?
லோகேஷ் கனகராஜ்
சூப்பர் ஸ்டார் ரஜினி, இளம் நடிகர்களுக்கே டப் கொடுக்கும் வகையில் படங்கள் நடித்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வெற்றிநடைபோட்டு வருகிறார்.
ஜெயிலர், வேட்டையன் படங்களை தொடர்ந்து ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். அவருடன் இந்த படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைப்பில் தயாராகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி படம் வெளியாக இருக்கிறது.
சம்பளம்
கூலி படத்திற்காக ரஜினிகாந்த் ரூ. 260 கோடி முதல் ரூ. 280 கோடி வரை சம்பளம் பெற்றிருக்கிறார் என்று தகவல்கள் வலம் வந்தன.
அதேபோல் லோகேஷ் கனகராஜும் ரூ. 60 கோடி வரை சம்பளம் பெற்றார் எனப்பட்டது. இதுகுறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் பேசும்போது, ரஜினி சாரின் சம்பளம் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.
ஆனால் என் சம்பளம் ரூ. 50 கோடி என நீங்கள் குறிப்பிட்டீர்கள், இது என்னுடைய முந்தைய படமான லியோ வெற்றியால் அதிகமானது. அந்த படம் ரூ. 600 கோடி வசூலிக்க எனது சம்பளமும் அந்த படத்தில் வாங்கியதை விட இரண்டு மடங்கு அதிகமானது.
இந்த பணத்தில் நான் வரி கட்டுவதோடு எனது நண்பர்களுக்கும் உதவ முடிகிறது என பேசியுள்ளார்.