லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம்.. வெளிவந்த லேட்டஸ்ட் அப்டேட்
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதை தொடர்ந்து லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி சமீபத்தில் தான் தன்னுடைய காட்சிகளை நிறைவு செய்தார்.
இதன்பின், TJ ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் தன்னுடைய 170வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், தலைவர் 171 படத்தின் பேச்சு துவங்கிவிட்டது.
தலைவர் 171
ஏற்கனவே வெளிவந்த தகவலின்படி தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் பணிகளை லோகேஷ் கனகராஜ் தனது நண்பரும் பிரபல இயக்குனருமான ரத்னகுமாருடன் இணைந்து ஆரம்பித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இப்படத்தில் பிரபல நடிகர் பாபு ஆண்டனி நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இவர் ஏற்கனவே லியோ படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை வாங்கி ஓசி சோரு சாப்புட்ற!! காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை அவமானப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்..
You May Like This Video