படங்கள் இயக்குவது குறித்து ஷாக்கிங் தகவல் கூறிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்- இன்னும் இத்தனை படங்கள் தான் இயக்குவாரா?
லோகேஷ் கனகராஜ்
சில வருடங்களுக்கு முன் அவியல் என்ற படத்தின் மூலம் இளம் இயக்குனராக அறிமுகமானவர். அப்படத்திற்கு பிறகு மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் இயக்கி வருகிறார்.
இப்போது ரசிகர்கள் லியோ படத்திற்காக ஆவலாக வெயிட்டிங். விஜய்-லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது, அடுத்து சென்னையில் நடைபெற்றது.
தற்போது படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது, அதற்கான அறிவிப்பும் வந்துவிட்டது. அதோடு 20 நொடிக்கு ஒரு செம்ம சர்ப்ரைஸ் உள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

ஷாக்கிங் ஸ்பீச்
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், 20 வருடங்களுக்கு மேலாக படங்கள் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஒரு 10 படங்களை இயக்கிவிட்டு நான் சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என கூறியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் கூறிய இந்த விஷயம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

அஜித்தின் ஆசை பட புகழ் நடிகை சுவலட்சுமியா இது?- திருமணத்திற்கு பின் எப்படி உள்ளார் பாருங்க