பல மடங்கு சம்பளத்தை உயர்த்திய லோகேஷ் கனகராஜ்.. கூலி படத்திற்காக இத்தனை கோடி சம்பளமா
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக லியோ படம் வெளிவந்தது. விமர்சன ரீதியாக இப்படம் பெரிதளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தை இயக்கவுள்ளார். சமீபத்தில் கூட இப்படத்திற்காக டைட்டில் டீசர் வீடியோ ஒன்று வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என திரை வட்டாரத்தில் கூறுகின்றனர்.
லோகேஷ் சம்பளம்
இந்த நிலையில், கூலி திரைப்படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வாங்கியுள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக ரூ. 60 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறாராம் லோகேஷ். இதற்கும் அவர் இயக்கிய லியோ படத்திற்காக ரூ. 20 கோடி சம்பளமாக பெற்றாராம்.
பிரம்மாண்டமாக நடக்கப்போகும் விஜய்யின் கோட் ஆடியோ வெளியீட்டு விழா- தமிழ்நாட்டில் இல்லை, வேறமாதிரி பிளான்
ஆனால், தற்போது கூலி படத்திற்காக எதிர்பார்க்கமுடியாது அளவிற்கு சம்பளத்தை உயர்த்தியுள்ளார் என்கின்றனர். லோகேஷ் கனகராஜ் கூலி படத்திற்காக ரூ. 60 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.