கூலி திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும் தனக்கென்று தனி யூனிவெர்ஸையும் உருவாக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.
நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், ஷோபின் ஷபீர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
சம்பளம்
இந்த நிலையில், கூலி திரைப்படத்தை இயக்குவதற்கான லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தை இயக்க இயக்குநர் லோகேஷ் ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
