கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா?
லோகேஷ் கனகராஜ்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடும் விதமாக வெளியான திரைப்படம் கூலி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் இருந்து அமீர்கான், தெலுங்கு சினிமாவில் இருந்து நாகர்ஜுனா, கன்னட சினிமாவில் இருந்து உபேந்திரா, மலையாள சினிமா புகழ் சௌபின் சாகிர் என பலர் நடித்தனர்.
பிரம்மாண்டத்தின் உச்சமாக பல படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை செய்யும் இப்படம் ரூ. 400 கோடியை தாண்டி கலெக்ஷன் செய்து வருகிறது.
சம்பளம்
திரையரங்குகளில் வெற்றிநடைபோடும் இந்த கூலி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ரூ. 50 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.
இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கார்த்தியுடன் இணைந்து கைதி 2 படத்தை எடுக்க இருக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் கைதி படத்திற்காக லோகேஷ் கனகராஜ் ரூ. 75 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.