பாக்ஸ் ஆபிஸ் பார்க்க மாட்டேன் என சொன்ன லோகேஷ்.. இப்போது எதற்கு இந்த ட்விட்? விமர்சிக்கும் நெட்டிசன்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன லியோ படம் தற்போது பாக்ஸ் ஆபிசில் பெரிய சாதனை படைத்து வருகிறது.
விஜய் ரசிகர்கள் படத்தை வெறித்தனமாக கொண்டாடி வரும் நிலையில் சமீபத்தில் கேரளாவுக்கு லோகேஷ் சென்றபோது அவரை காண பெரிய கூட்டமே கூடி இருந்தது. அதில் சிக்கி அவர் காயமடைந்த நிலையில் அடுத்து இருந்த சந்திப்புகள் மற்றும் பிரெஸ் மீட்டை அவர் ரத்து செய்தார்.

பாக்ஸ் ஆபிஸ்
தற்போது லியோ படம் 7 நாட்களில் 461 கோடி ருபாய் வசூலித்து இருப்பதாக லோகேஷ் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
'நான் பாக்ஸ் ஆபிஸ் வசூலை பார்க்க மாட்டேன்' என முன்பு பேட்டிகளில் சொன்ன லோகேஷ் கனகராஜ் தற்போது ஏன் மாறிவிட்டார் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
லியோ படம் ஹிட் தான் என்பதை நிரூபிக்கவும், ட்ரோல்களுக்கு பதிலடி கொடுக்கவும் தான் இப்படி ஒரு பதிவை போட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
You said in an interview that you never look for box office numbers. Then why you are tweeting about it?
— Naresh Ejjigiri (@nareshejjigiri) October 26, 2023