கூலி LCU படமா இல்லையா? லோகேஷ் கடைசி நேரத்தில் வெளியிட்ட அறிக்கை
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கூலி படம் நாளை ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் அதைக் கொண்டாட வெறித்தனமாக தயாராகி வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை 400 கோடிக்கும் மேலான பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
கைதி தொடங்கி லியோ வரை லோகேஷ் கனகராஜின் மற்ற படங்கள் அனைத்தும் எல்சியு எனப்படும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் லிஸ்டில் இருக்கின்றன. அதுபோல கூலி படமும் அந்த லிஸ்டில் வருமா என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் அவர் அதற்கு இல்லை என்று தான் பதில் கூறி வந்தார். ஆனாலும் படத்தில் எதாவது ட்விஸ்ட் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
LCU இல்லை
தனது படம் ரிலீஸுக்கு முந்தைய நாள் இரவு லோகேஷ் ஒரு அறிக்கை வெளியிடுவது வழக்கம். அப்படி கூலி படத்திற்காகவும் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
இது தனியான standalone படம்தான், எல்சியு இல்லை என்பதை அவர் உறுதியாக கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ரசிகர்கள் படம் பார்க்கும்போது எந்த ஏமாற்றமும் இருக்காது. அதற்காக தான் இப்படி ஒரு விளக்கத்தை லோகேஷ் இறுதியாக கொடுத்திருக்கிறார். அவரது அறிக்கை இதோ.

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
