தலைவர் 171 டைம் ட்ராவல் படமா.. கதை பற்றி கசிந்த தகவல் இதோ
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் தலைவர் 171 படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்கு கழுகு என பெயரிடப்படலாம் என ஒரு தகவல் பரவி வருகிறது.
இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருந்தது. அதில் ரஜினி கையில் வாட்சுகளை வைத்து கைவிலங்கு போடப்பட்டு இருந்தது. மேலும் பின்னணியிலும் வாட்ச் இடம்பெற்று இருந்தது.
டைம் ட்ராவல் படம் இல்லை
அந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்கள் இது டைம் ட்ராவல் படமா என கேட்டு வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லையாம்.
லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான கைதி உள்ளிட்ட படங்களை போல இந்த படமும் 24 மணி நேரத்தில் நடக்கும் கதையாம். அதை குறிப்பிடத் தான் வாட்ச் பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.