தலைவர் 171 டைட்டில்.. டைம் ட்ராவல் படமா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஷூட்டிங் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என லோகேஷ் சமீபத்தில் ஒரு பிரெஸ் மீட்டில் கூறி இருந்தார்.
டைட்டில் தேதி
இந்நிலையில் தலைவர் 171 படத்தின் டைட்டில் வரும் ஏப்ரல் 22ம் தேதி டீசருடன் வெளியிடப்படும் என லோகேஷ் தற்போது அறிவித்து இருக்கிறார். இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
மேலும் போஸ்டரில் ரஜினி கையில் வாட்ச்களை இணைத்து கைவிலங்காக மாட்டப்பட்டு இருக்கிறது. மேலும் பின்னணியில் வாட்ச் தான் போஸ்டரில் இடம் பெற்று இருக்கிறது. அதனால் இது டைம் ட்ராவல் கதையாக இருக்கும் என தெரிகிறது.
#Thalaivar171TitleReveal on April 22 🔥 pic.twitter.com/ekXFdnjNhD
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) March 28, 2024