முன்னணி ஹீரோவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்? விஜய்க்கு அடுத்து இவரா

By Parthiban.A Jun 17, 2022 10:00 AM GMT
Report

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 67 படத்தை இயக்க இருக்கிறார் என முன்பே அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இந்தப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் படமாக இருக்கும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். அதனால் அந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

முன்னணி ஹீரோவை இயக்கும் லோகேஷ் கனகராஜ்? விஜய்க்கு அடுத்து இவரா | Lokesh Kanagaraj To Direct Allu Arjun

இந்நிலையில் தற்போது புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் உடன் ஒரு புது படத்தில் லோகேஷ் கூட்டணி சேர இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகிறது. விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜை தெலுங்கு சினிமா நடிகர்கள் கூட பலரும் அனுகி வருகிறார்கள். அதனால் லோகேஷ் கனகராஜ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

இருப்பினும் அவர் அல்லு அர்ஜுன் உடன் கூட்டணி சேர்க்கிறாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US