ஒன்றரை மாசம் வெளிய கூட வரல.. தலைவர்171 அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் கூட்டணி சேர இருக்கிறார். தலைவர் 171 என தற்காலிகமாக அழைக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார்.
அதனால் சமூக வலைத்தளங்களில் இருந்து அவர் விலகி இருக்கப்போவதாகவும் முன்பே அறிவித்து இருந்தார்.
இன்னும் நிறைய எழுதனும்..
தற்போது தலைவர் 171 படம் பற்றி லோகேஷ் கனகராஜ் பேட்டியில் சில விஷயங்களை கூறி இருக்கிறார்.
"தற்போது ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தீவிரமாக இருக்கிறோம். இன்னும் நிறைய எழுத வேண்டி இருக்கிறது. முதற்கட்ட பணிகள் முடிய இன்னும் இரண்டு - மூன்று மாதம் இருக்கிறது."
"நான் வெளியில் கூட வருவதில்லை. பலர் என்னை தொடர்பு கொள்ள முயற்சித்து இருக்கிறார்கள். நான் ஒன்றரை மாதமாக போன் யூஸ் செய்வதையும் நிறுத்திவிட்டேன்" என லோகேஷ் தெரிவித்து இருக்கிறார்.