லோகேஷ் கனகராஜ் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித்!
லோகேஷ் கனகராஜ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் கமலின் தீவிர ரசிகர் என கூறி வந்த நிலையில் விக்ரம் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்து ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்க இருக்கிறார் அவர்.
மேலும் லோகேஷ் தளபதி விஜய் உடன் மாஸ்டர், லியோ ஆகிய படங்களில் பணியாற்றி இருக்கும் அவர், அஜித் உடன் எப்போது கூட்டணி சேர்வார் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
பயங்கரமான ஆசை
இந்நிலையில் லியோ பட ப்ரோமோஷனுக்காக பிரெஸ் மீட் வைத்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்தார் லோகேஷ்.
அப்போது அஜித்தை இயக்குவீர்களா என ஒரு செய்தியாளர் கேட்க, "அஜித்தை வைத்து படம் வேண்டும் என பயங்கரமான ஆசை இருக்கிறது" என லோகேஷ் கூறி இருக்கிறார்.
அவரது ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.