1000 நெகடிவ் விமர்சனம், ஆனாலும் ரூ.500 கோடி வந்துச்சே.. கூலி ட்ரோல்களுக்கு லோகேஷ் கனகராஜ் பதிலடி
சூப்பர்ஸ்டார் ரஜினி, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, ஹிந்தி நடிகர் அமீர் கான் என பலர் நடித்து இருந்த படம் கூலி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அதிக வன்முறை காட்சிகள் இருந்த நிலையில் அதிகம் நெகடிவ் விமர்சனங்கள் வந்தது.

ரூ.500 கோடி வசூல் வந்துச்சே.. லோகேஷ் பதிலடி
இந்நிலையில் கூலி படத்திற்கு வந்த நெகடிவ் விமர்சனங்களுக்கு லோகேஷ் பதிலடி கொடுத்து இருக்கிறார்.
"கூலி படம் வெளியான பிறகு நான் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. அடுத்த பட வேலையில் பிசியாக இருந்தேன். கூலி படம் மீது 1000 விமர்சனம் இருந்தது, விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அடுத்த படத்தில் அதை தவிர்க்க முயற்சிக்கிறேன்."

"விமர்சனங்கள் தாண்டி மக்கள் ரஜினி சாருக்காக படம் பார்த்தார்கள். 500 கோடி வசூலித்ததாக தயாரிப்பாளர் கூறினார். அதனால் மக்களுக்கு நன்றி" என லோகேஷ் கூறி இருக்கிறார்.