சூர்யா, கார்த்தி இல்லை.. கூலி படத்திற்கு பின் இந்த ஹீரோவை இயக்குகிறாரா லோகேஷ்? அதிரடி தகவல்
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் சில படங்களே இயக்கியிருந்தாலும் புகழின் உச்சிக்கு சென்ற இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார், படத்திற்கான வேலைகளும் படு விறுவிறுப்பாக நடந்துகொண்டு வருகிறது.
இப்படத்திற்கு பிறகு கைதி 2, விக்ரம் 2 உள்ளிட்ட படங்களை இயக்க இருக்கிறார் என கூறப்பட்ட நிலையில், அடுத்து லோகேஷ் இயக்க போகும் நடிகர் குறித்து அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
அதிரடி தகவல்
அதன்படி, பிரபாஸ் அவரது அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜை செய்ய சொல்லி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். அந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், கைதி மற்றும் ரோலக்ஸ் ஆகிய படங்களை முடித்து விட்டு தான் லோகேஷ் பிரபாஸ் பக்கம் செல்வார் என்றும் கூறப்படுகிறது. இதில், எது உண்மை என்று கூலி படம் வெளியான பின் தான் தெரியும்.

ஜெலென்ஸ்கியிடம் கத்திய டிரம்ப்! போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் வெடித்த வார்த்தை மோதல் News Lankasri
