அந்த ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் நடிகரா?.. கூலி படம் குறித்து லோகேஷ் கனகராஜ்
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சோபின் ஷபீர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 14- ம் தேதி திரைக்கு வர உள்ளது.
டாப் நடிகரா?
இந்நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " சவுபினின் கதாபாத்திரம் முதலில் பகத் பாசிலுக்காக எழுதப்பட்டது. ஆனால், கால் சீட் காரணமாக அவரால் இந்த படத்தில் நடிக்கமுடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மாதங்களுக்கும் மேலாக செலவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
