அஜித்துடன் படம் எப்போது?.. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அதிரடி பதில்
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் இன்று வெளியானது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்க ரஜினியுடன், சத்யராஜ், நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், பூஜா ஹெக்டே என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். அனிருத் இசையில் தயாராகியுள்ளது.
அதிரடி பதில்
இந்நிலையில், படம் முடித்து வெளியே வந்த லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது, படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ரெஸ்பான்ஸால் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், விஜய், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து விட்டீர்கள்.
அஜித்துடன் எப்போது என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர். அதற்கு, "எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது கண்டிப்பாக பண்ணுவேன். அவருடன் படம் பண்ண வேண்டும் என்று எனக்கும் ஆசை உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri
