தளபதி விஜய்க்கு நன்றி தெரிவித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட பதிவு ! அன்ஸீன் புகைப்படம்..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் இதே நாளில் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. இன்றும் கூட ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் இப்படத்தில் நடித்த நட்சத்திரங்களும் #1YrOfIndustrySaviourMASTER என்ற ஹாஷ்டேக் உடன் மாஸ்டர் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.
இதனிடையே இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பதிவிட்டு மாஸ்டர் படத்திற்காக தளபதி விஜய், விஜய் சேதுபதி, மற்றும் படக்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
One year of #Master???? Thank you so much @actorvijay na! @VijaySethuOffl na! #lalithkumar sir @XBFilmCreators @Jagadishbliss bro! & the entire Team! Thank you Press Media Fans and Audience?? ?? pic.twitter.com/b0YfhWkSWD
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 13, 2022