LOL எங்க சிரி பாப்போம் சீசன் 1 டைட்டில் வின்னர் இவர் தான்.. ரூ. 25 லட்சத்தை தட்டி தூக்கிய பிரபலம்
முதல் முறையாக தென்னிந்திய அளவில் சிரிப்பிற்காக மட்டுமே வெளியான நிகழ்ச்சி தான், LOL எங்க சிரி பாப்போம்.
இதில் மறைந்த நடிகர் விவேக் மற்றும் நடிகர் சிவா இருவரும் இணைந்து முதல் முறையாக தொகுத்து வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக, புகழ், ஆர்த்தி, பிரேம்ஜி, பவர்ஸ்டார் சிறீனிவாசன், சதீஸ், என 10 பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். 6 எபிசோட்கள் கொண்ட இந்த நிகழ்ச்சி இன்று அமேசான் பிரைமில் வெளியானது.
இந்த நிகழ்ச்சியின் விதிப்படி, மற்றவர்களை சிரிக்க வைக்கலாம், ஆனால் போட்டியாளர்களாக களமிறங்கி இருப்பவர்கள் சிரித்துவிட கூடாது. அப்படி சிரித்துவிட்டாள் போட்டியை விட்டு வெளியேறி விடுவார்கள்.
இப்படி மிகவும் கடுமையான போட்டியை தாண்டி, LOL எங்க சிரி பாப்போம், சீசன் 1 டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் விஜய் டிவி புகழ்.
அவர் மட்டுமின்றி, அவருடன் இணைந்து விளையாடிய அபிஷேக் குமார் என்பவரும் வெற்றியாளர் என்று அறிவித்துள்ளனர். போட்டியின் வெற்றியாளர்களான இருவருக்கும், ரூ. 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.