தலைமறைவாக இருக்கும் மீரா மிதுனை பிடிக்க போலீஸ் அதிரடி நடவடிக்கை! சிக்குவாரா?
மீரா மிதுன்
சூப்பர் மாடல் மீரா மிதுனை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதும் சர்ச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்த அவர் லைவ் வீடியோவில் பட்டியலினத்தவர்கள் பற்றி பேசி பிரச்சனையில் மாட்டிக்கொண்டார்.
அவரை கைதாகி சிறையில் இருந்த நிலையில் பல வாரங்களுக்கு பிறகு ஜாமீன் பெற்று வெளியில் வந்தார். ஜாமீன் பெற்ற அவர் மீண்டும் அடுத்தடுத்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதனால் அவரை பிடிக்க கைது வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.
ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக போலீசார் கூறினர். மீரா மிதுன் காணவில்லை என அவரது அம்மாவும் ஒரு பக்கம் புகார் அளித்து இருந்தார்.
லுக் அவுட் நோட்டீஸ்
இந்நிலையில் தற்போது மீரா மிதுனை பிடிக்க போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுக்க தொடங்கி இருக்கிறது. அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் தர போலீசார் முடிவெடுத்து இருக்கிறார்கள்.
மீரா மிதுன் சிக்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பெயர் கெட்டுப்போச்சு.. அசிங்கப்படுத்திட்டார்.. என்னை வெளியில அனுப்பிடுங்க! கத்தி கதறிய தனலட்சுமி