ஈழம் சார்ந்த கதையுள்ள படங்கள் குறித்து லொஸ்லியா அதிரடி பதில்
லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பேமஸ் ஆனார். ஒரே நிகழ்ச்சியில் ஓஹோ என்று வாழ்க்கை அவருக்கு மாறியுள்ளது.
ஆம், பிக்பாஸை தொடர்ந்து ப்ரண்ட்ஷிப் மற்றும் கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களுமே தற்போது ரிலிஸிற்கு ரெடியாகியுள்ளது, இதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் லொஸ்லியா பிஸியாக இருந்து வருகின்றார்.
இந்நிலையில் லொஸ்லியாவிடம் ஒரு பேட்டியில், ஈழம் சார்ந்த கதையுள்ள படங்கள் குறித்து உங்கள் பார்வை என்ன என்று கேட்டனர்.
அதற்கு அவர் மிகவும் நிதானமாக ‘ஈழம் குறித்த புரிதல்கள் இங்கிருப்பவர்கள்(இந்தியாவில்) பலருக்கும் தெரியாது.
ஒரு படத்தில் எப்படி, அத்தனை பேர் வலியையும் உங்களால் காட்ட முடியும், பல பேர் குடும்பத்தை இழந்துள்ளனர்.
அவர்களின் வலியை எப்படி ஒரு படத்தில் உங்களால் காட்ட முடியும்?, அப்படிப்பட்ட படத்தை எடுக்காமல் இருப்பதே நல்லது’ என்று லொஸ்லியா கூறியுள்ளார்.