லாஸ்லியாவின் காதலருக்கு திருமணம் ஆகிவிட்டதா! முதல் முறையாக கூறிய நடிகை
லாஸ்லியா
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சி லாஸ்லியாவை மக்களிடையே கொண்டு சேர்த்தது.
இதன்பின் பட வாய்ப்புகளும் லாஸ்லியாவை தேடி வந்தன. ஆனால், இவர் நடித்த சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தேடி தரவில்லை. மேலும் தற்போது லாஸ்லியா கைவசம் அன்னபூரணி எனும் திரைப்படம் இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததை விட தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிவிட்டார். இந்த நிலையில், பேட்டி ஒன்றில் தனது முதல் காதல் குறித்து லாஸ்லியா பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.
முதல் காதல்
இந்த பேட்டியில், தொகுப்பாளர் நடிகை லாஸ்லியாவிடம் உங்களுடைய முதல் காதல் குறித்து கூறும்படி கேள்வி எழுப்பினார். இதற்கு "என்னுடைய முதல் காதல் பள்ளி பருவத்தில் வந்தது. அது ஒருதலை காதல் தான். அந்த பையனுக்கு இப்போ திருமணம் கூட ஆகிவிட்டது" என ஜாலியாக கூறினார்.
இந்த தகவலை நடிகை லாஸ்லியாவே அந்த பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.