பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக்ஸஸ் பார்ட்டியில் ஆரி மற்றும் பாலாஜி உடன் லாஸ்லியா..! வீடியோவுடன் இதோ...
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.
அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த உடன் போட்டியாளர்கள் அனைவரும் இதன் சக்ஸஸ் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.
அதில் ஆரி, பாலாஜி, சோம், ரம்யா உடன் லாஸ்லியாவும் கலந்துகொண்டுள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
#BiggBoss4Tamil success event #AariArjunan #BalajiMurugaDoss #RamyaPandiyan #Kamalhassan #BiggBossTamil pic.twitter.com/ZXAcjM5x3d
— Raj (@rajvr24) January 18, 2021