'லாஸ்லியா லீக்ஸ்' பெயரில் வெளியான போட்டோஸ்! நடிகையிடம் ஹேக்கர்கள் கைவரிசை
பிக் பாஸ் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆன லாஸ்லியா தற்போது கோலிவுட்டில் நடிகையாக களமிறங்கி இருக்கிறார். அவர் சில படங்களில் தற்போது வரை நடித்து இருக்கிறார். அவர் பிக் பாஸ் தர்ஷன் உடன் சேர்ந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்து இருந்தார்.
நடிப்பு கெரியரை தீவிரமாக தொடங்கி இருப்பதால் லாஸ்லியா தற்போது தனது உடல் எடையை அதிகம் ஒர்கவுட் செய்து குறைத்து இருக்கிறார்.
மேலும் லாஸ்லியா தனது கிளாமர் போட்டோஷூட் ஸ்டில்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று லாஸ்லியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு திடீரென ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. லாஸ்லியா லீக்ஸ் என குறிப்பிட்ட சில புகைப்படங்களும் அவரது கணக்கில் பதிவிடப்பட்டு இருக்கின்றன.
அதற்கு பிறகு தான் லாஸ்லியா தனது கணக்கு ஹேக்கர்களிடம் இருந்து மீட்கப்பட்டுவிட்டது என குறிப்பிட்டு இருக்கிறார்.