முன்னணி தமிழ் நட்சத்திரத்துடன் இணைந்த பிக் பாஸ் லாஸ்லியா.. யாருனு தெரியுமா
மலையாளத்தில் வெற்றிகண்ட ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25, என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் கூகுள் குட்டப்பா.
இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான தர்ஷனும், லாஸ்லியாவும் ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமாரிடம் துணை இயக்குனர்களாக பணிபுரிந்த சரவணன், சபரி ஆகியோர் இப்படத்தை இயக்கி உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, கூகுள் குட்டப்பா படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ரொமாண்டிக் பாடல் ஒன்றை பாடி உள்ளாராம்.
இப்பாடலுக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதி உள்ளார். விரைவில் இப்பாடல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri