ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. அதுவும் எப்படி தெரியுமா, நீங்களே பாருங்க
பிக் பாஸ் சீசன் 3-யின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானவர் லாஸ்லியா.
செய்தி வாசிப்பாளராக இருந்த இவர் பிக் பாஸ் மூலம் கிடைத்த படங்களின் வாய்ப்பை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாகியுள்ளார்.
இவருடைய முதல் படமாக Friendship அமைந்தது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.
இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தை தொடர்ந்து தற்போது கே.எஸ். ரவிக்குமார் தயாரித்து,நடித்து வரும் கூகுள் குட்டப்பா படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
நடிகை லாஸ்லியா அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது சிம்பிளாக இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் லாஸ்லியா.