திருமண கோலத்தில் பிக் பாஸ் லாஸ்லியா! வீடியோ இணையத்தில் படுவைரல்
தமிழ் பிக் பாஸ் 3ம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் தற்போது நடிகையாக தமிழ் சினிமாவில் நுழைந்திருக்கிறார்.
பிக் பாஸுக்கு பிறகு தனது உடல் எடையை அதிகம் குறைத்த அவர் அதற்கான காரணத்தையும் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருந்தார். தனக்கு உடலில் பிரச்சனை இருந்ததனால் தான் எடையை குறைக்க வேண்டி இருந்தது என்றும், நடிகை என்பதால் ஸ்கிரீனில் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காகவும் எடையை குறைந்ததாக லாஸ்லியா கூறினார்.

திருமண உடையில் போட்டோஷூட்
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் லாஸ்லியா அவ்வப்போது தனது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது லாஸ்லியா மணப்பெண் போல மேக்கப் போட்டு போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அதன் வீடியோவை தற்போது லாஸ்லியா இன்ஸ்டாவில் வெளியிட அது தற்போது இணையத்தில் படுவைரல் ஆகி கொண்டிருக்கிறது.