லாஸ்லியா, ஹர்பஜன் சிங் நடிக்கும் Friendship படத்தின் அப்டேட் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருக்கு பட வாய்ப்பும் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் கைவசம் ‘பிரெண்ட்ஷிப்’, ‘கூகுள் குட்டப்பன்’ மற்றும் இரு படங்கள் உள்ளன.
இதில் 'Friendship' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடந்து வருகிறது.
ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி இருக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக நடித்துள்ளார் லாஸ்லியா.
இந்நிலையில் இப்படம் U/A சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது என படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதுமட்மின்றி அடுத்த மாதம் Friendship வெளியாகும் என்று இந்த போஸ்டரில் அறிவித்துள்ளது படக்குழு.

சூரியன் - சந்திரன் ஒரே நாளில் நிகழும் அரிய ராசி மாற்றம்... இந்த ராசிகளுக்கு இனி பொற்காலம் தான்! Manithan