ஒரே தலைப்பில் வெவ்வேறு படங்களில் நடிக்கும் நயன்தாரா, லாஸ்லியா.. ரசிகர்கள் குழப்பம்
நயன்தாராவின் அன்னபூரணி
லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் தற்போது மண்ணாங்கட்டி, டெஸ்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் இவருடைய 75வது படத்தின் தலைப்பு அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. இப்படத்திற்கு அன்னபூரணி என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா என்பவர் இயக்குகிறார்.

லாஸ்லியாவ் அன்னபூரணி
ஆனால், இதே தலைப்பில் லாஸ்லியா நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு வெளிவந்தது. இப்படத்தில் லாஸ்லியாவுடன் இணைந்து லிஜோமல் ஜோஷ் மற்றும் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தை ஜோஷுவா என்பவர் இயக்குகிறார்.

லாஸ்லியா நடிக்கும் படத்தின் பெயரும் அன்னபூரணி, நயன்தாரா நடிக்கும் படத்தின் பெயரும் அன்னபூரணி என்பதால் ரசிகர்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கான விளக்கம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan