மகிழ்ச்சியான காட்சிகளுடன் முடிவுக்கு வந்தது LBW வெப் சீரிஸ்... கடைசி காட்சி போட்டோ இதோ
LBW வெப் சீரிஸ்
திரைப்படங்களை தாண்டி சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மக்களால் கொண்டாடப்பட்டது.
அதையும் தாண்டி வெப் தொடர்களுக்கு என்று மக்களிடம் தனி வரவேற்பு உள்ளது. சமீப காலங்களில் வெப் தொடர்களில் ஹிட்டாக ஓடியது என்றால் Love Beyond Wicket தான். விக்ராந்த் மற்றும் நியதி கடம்பி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விளையாட்டை மையப்படுத்தி உருவானது.

கணேஷ் கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படம் சிறந்து விளங்கிய கிரிக்கெட் வீரரான ரங்கன், தனது வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் போகவே, தகுதி குறைந்த மாணவர்களைக் கொண்ட ஒரு அணிக்கு பயிற்சியாளராகிறார்.
அவர்கள் அனைவரும் தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், தங்கள் வாழ்க்கைப் பாதையைக் கண்டறியவும் போராடுவதே இத்தொடரின் மையக்கதை.
ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய இந்த வெப் தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 120 எபிசோடுகளுடன் இந்த வெப் தொடர் முடிந்துள்ளது, கடைசி காட்சியின் போட்டோ இதோ,