10 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா
Love Insurance Kompany
பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகி கடந்த 10ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் Love Insurance Kompany. இப்படத்தை நயன்தாரா மற்றும் லலித் குமார் இணைந்து தயாரித்திருந்தனர்.

அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து சீமான், மாளவிகா, யோகி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
சற்று வித்தியாசமான கதைக்களத்தில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த LiK, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால், வசூலிலும் இப்படம் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது.

Love Insurance Kompany 10 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் நிலையில், இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 10 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 58.5 கோடி வசூல் செய்துள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்.. இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு விசாரணை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு! IBC Tamilnadu