5 நாட்களில் LiK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
LiK
பிரதீப் ரங்கநாதன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.
லவ் டுடே, டிராகன் மற்றும் Dude என தொடர்ந்து மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து, வசூல் நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் பிரதீப் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் LiK.

இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்க, வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்திருந்தார்.
வசூல்
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும், வசூலில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், LiK திரைப்படம் 5 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 5 நாட்களில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan