காதல் பற்றி தனுஷ் இப்படி சொல்லிட்டாரே.. விவாகரத்துக்கு பின் இப்படியா
நடிகர் தனுஷ் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து 18 ஆண்டுகள் ஒன்றாக இருந்த நிலையில் 2022ல் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
அதற்கு பிறகு சில மாதங்களுக்கு முன் தனுஷ் பிரபல நடிகை மிருனாள் தாகூர் உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அது வதந்தி என நடிகை விளக்கம் கொடுத்துவிட்டார்.
தற்போது தனுஷ் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் Tere Ishk Mein என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் அவர் ஜோடியாக க்ரித்தி சனோன் நடித்துள்ளார்.

காதல் பற்றி..
சமீபத்தில் Tere Ishk Mein படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. அதில் காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது.
அதற்கு தனுஷ் "It’s just another overrated emotion" என பதில் அளித்து இருக்கிறார். விவாகரத்துக்கு பிறகு தனுஷ் காதல் பற்றி இப்படி சொல்லிவிட்டாரே என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.
