சூர்யாவுடன் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
சூர்யா
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக சூர்யா 42 திரைப்படம் உருவாகி வருகிறது.
சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விருப்விருப்பாக நடைப்பெற்று வருகிறது.
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த 4ஆம் தேதி வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் கதாநாயகியாக இவானா நடித்திருந்தார்.
மேலும் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருந்தார்கள். ட்ரைலர் மூலம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெளிவந்த இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது.
இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் கவர்ந்த இப்படம் இதுவரை ரூ. 75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
சூர்யாவுடன் ரவீனா
இப்படத்தில் ஹீரோவின் அக்காவாக படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரவீனா. இவர் பிரபல டப்பிங் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய தாய் ஸ்ரீஜா ரவியும் முன்னணி டப்பிங் கலைஞர் ஆவர்.
இந்நிலையில், நடிகை ரவீனா தனது சிறு வயதில் குடும்பத்துடன் நடிகர் சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri

போலீஸ் அதிகாரியின் நேர்மையை பார்த்து எம்ஜிஆர் என்ன செய்தார்ன்னு தெரியுமா...? இதோ வெளியான தகவல்...! IBC Tamilnadu
