செம வசூல் செய்கிறது பிரதீப்பின் லவ் டுடே- இதுவரை மட்டுமே எத்தனை கோடி வசூல் தெரியுமா?
லவ் டுடே
இளம் இயக்குனர் அதாவது கோமாளி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த பிரதீப் இயக்கி, நடித்துள்ள திரைப்படம் தான் லவ் டுடே. இப்படம் கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி படு மாஸாக வெளியாகி இருந்தது.
வெளியான நாள் முதல் படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது, வசூல் வேட்டை நடத்துகிறது.
படத்தின் பட்ஜெட் என்னவோ ரூ. 5 கோடி தான் ஆனால் வசூல் வேட்டை பல கோடிக்கு சென்றுகொண்டிருக்கிறது. இன்றைய காலகட்ட காதல் எப்படி உள்ளது என்பதை செம காமெடியுடன் காட்டியுள்ளார் இயக்குனர்.

படத்தின் வசூல்
நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்திவரும் இப்படம் இதுவரை ரூ. 46 கோடி வரை வசூலித்துள்ளதாம். நாளை கண்டிப்பாக படத்தின் வசூல் ரூ. 50 கோடியை எட்டிவிடும் என்கின்றனர்.
ப்துமுக நடிகர்கள் நடிக்க வெளியான படங்களில் அதிகம் வசூலித்தது இந்த படம் தானாம்.