வசூலில் சக்கை போடு போடும் லவ் டுடே படத்தின் முழு பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?
லவ் டுடே
தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம் கொஞ்சம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படமாக இருந்தது. காமெடி கலந்த நல்ல மெசேஜ் சொல்லும் படமாக இருந்தது.
அப்படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன், இது இவருக்கு முதல் திரைப்படம்.
தற்போது அவர் இரண்டாவதாக இயக்கியுள்ள திரைப்படம் லவ் டுடே, இதில் அவரும் நடித்துள்ளார். இவானா, சத்யராஜ், ராதிகா போன்ற நடிகர்களும் நடித்துள்ளார்கள்.
கல்பாத்தி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் அவர்களுக்கு ஹிட் படமாக அமைந்துள்ளது.
படத்தின் பட்ஜெட்
முதல் நாளில் ரூ. 2.5 கோடி வசூலித்த இப்படம் இரண்டு நாட்களில் ரூ. 5 கோடி வசூலித்தது. ஆனால் படத்தின் முழு பட்ஜெட்டே ரூ. 5 கோடி தானாம். போட்ட பணத்தை சில நாட்களிலேயே எடுத்து இப்போது செம வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
வரும் நாட்களிலும் படம் மிகவும் ஹவுஸ்புல்லாக ஓடும் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.