இந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே.. ஹீரோ, ஹீரோயின் இவர்கள் தானா
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து இவானா, சத்யராஜ், ராதிகா, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் வசூலில் பல கோடிகள் லாபத்தை தயாரிப்பாளருக்கு அள்ளிக்கொடுத்தது.
தமிழில் சூப்பர்ஹிட்டான இப்படம் தொடர்ந்து தெலுங்கிலும் வெளிவந்த மெகாஹிட்டானது. இதை தொடர்ந்து இப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளது என தகவல் வெளிவந்தது.
இந்தி ரீமேக்
ஆனால், யார் ஹீரோ, ஹீரோயின் என தெரியவரவில்லை. இந்நிலையில், இந்தியில் ரீமேக் ஆகும் லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோவாக அமீர் கான் மகன் நடிக்கிறாராம்.
அதே போல் ஹீரோயினாக ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூர் நடிக்கவுள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.
வாத்தி பட நடிகை சம்யுக்தாவா இது? ஷார்ட் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

100க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு; வன்கொடுமை, ஆசிட் தழும்பு - 13 இடங்களில் தோண்டும் பணி! IBC Tamilnadu
