லவ் டுடே ஹிந்தி ரீமேக் மிகப்பெரிய பிளாப்! வசூல் இவ்வளவு தானா
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படம் பெரிய ஹிட் ஆகி இருந்தது. மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதே கதையை தற்போது ஹிந்தியில் Loveyapa என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அமீர் கான் மகன் ஜுனைத் கான் மற்றும் ஸ்ரீதேவி இளைய மகள் குஷி கபூர் இதில் நடித்து இருந்தனர்.

வசூல்
Loveyapa படம் கடந்த பிப்ரவரி 7ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் வரவில்லை.
சுமார் 60 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த படம் தற்போது 6.8 கோடி ரூபாய் நெட் வசூல் மட்டுமே பெற்று இருக்கிறதாம்.
இரண்டாவது வாரம் முடியும் நிலையிலும் இன்னும் 10 கோடி கூட வசூல் வரவில்லை. அதனால் மிகப்பெரிய பிளாப் ஆக மாற இருக்கிறது இந்த படம் என தகவல் வந்திருக்கிறது.

“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri